#BREAKING || பொது இடங்களில் முககவசம் கட்டாயம்.! ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த சில நாட்களாக மீண்டும் தீயாய் பரவ தொடங்கியுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் நாள்தோறும் கணிசமான எண்ணிக்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதில் கொரோனா பரவல் அதிகம் உள்ள மாநிலங்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 10,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 23 பேர் பலியாகியுள்ளனர். இதன் படி, கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 57,742- ஆக உயர்ந்துள்ளது.

இதில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு நாள்தோறும் கணிசமான எண்ணிக்கையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ranipet District Collector orders mandatory wearing of masks in public places


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->