தொடரும் கந்துவட்டி மிரட்டல்கள்.. அரசுப்பள்ளி தமிழ் ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தங்கச்சிமடம் அக்காள்மடம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் தங்கச்சிமடம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்த மாரியப்பன், பிள்ளைகளின் படிப்பு செலவிற்காக அவ்வப்போது தனி நபர்களிடம் கந்து வட்டி கடன் வாங்கி வந்துள்ளார். 

இதனை சரியாக திருப்பி கொடுக்க முடியாமல் இருந்த நிலையில், நேற்று ஆசிரியர் மாறியப்பனைத் தேடி அவரது வீட்டிற்கு இரண்டு பேர் வந்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் இல்லை என்று ஆசிரியரின் மனைவி கோரோய்ய நிலையில், நாங்கள் அவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்ததாகவும், நாளைக்குள் வட்டியும் அசலும் சேர்த்து ரூபாய் 60 இலட்சம் கொடுக்க வேண்டும் எனவும் தகராறு செய்துள்ளனர். 

மேலும், பணம் கொடுக்கவில்லை என்றால் பெருத்த அவமானத்தை ஏற்படுத்தி விடுவதாகவும் மிரட்டி சென்ற நிலையில், மதியம் வீட்டுக்கு வந்த கணவரிடம் வட்டிக்கு வாங்கிய பணத்தை என்ன செய்தீர்கள்? எனவும் மனைவி கேட்டுள்ளார். இதற்கு தமிழாசிரியர் சரியான பதில் கூறாமல் இருந்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனால் கடுமையான மன வேதனைக்கு உள்ளாகிய மாரியப்பன், குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தங்கச்சிமடம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராமேஸ்வரம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram Tamil Teacher Mariyappan Suicide due to Usury Loan Interest Problem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal