மக்களே தயாரா? தங்கம் விலை தாறுமாறாக சரிய போகுது.. சர்வதேச சந்தையில் நடந்த எதிர்பாரா ட்விஸ்ட்! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக வேகமாக உயர்ந்து வந்த தங்கம் விலை தற்போது சரிவை சந்திக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஒரே நாளில் காலை, மாலை என மொத்தமாக ரூ.1,560 வரை குறைந்ததால் முதலீட்டாளர்கள் மற்றும் நகை வாங்குபவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த வாரம் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்திருந்தது. ஆனால் தற்போது சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களால் விலை குறையும் நிலை உருவாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் இன்று

  • தங்கம்: அவுன்ஸ் ஒன்றின் விலை 3.52% குறைந்து சுமார் 5,136.11 டாலர் வரை சரிந்துள்ளது.

  • வெள்ளி: அவுன்ஸ் ஒன்றின் விலை 8.40% வரை சரிந்து சுமார் 81.8 டாலர் அருகே வர்த்தகமாகிறது.

இந்த சரிவுக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. முதலீட்டாளர்கள் தங்கம் மீது வைத்திருந்த கவனத்தை குறைத்து, கச்சா எண்ணெய் மற்றும் அமெரிக்க டாலர் போன்ற முதலீடுகளுக்கு மாறியுள்ளனர். அதேபோல் அமெரிக்க டாலர் மதிப்பு ஐந்து வார உச்சத்தில் இருப்பதும் தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்தியுள்ளது. மேலும் ஈரான் – அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் அல்லது ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், தங்கத்தின் “பாதுகாப்பான முதலீடு” என்ற நிலை சற்று குறைந்துள்ளது.

INVasset PMS நிறுவனத்தின் நிபுணர் ஹர்ஷல் தசானி கூறுகையில்,

  • அமெரிக்கா – ஈரான் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டால் தங்கம் விலை 3–5% வரை குறையலாம்.

  • வெள்ளி விலை 5–8% வரை சரிவை சந்திக்கக்கூடும் என கணித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட இந்த தாக்கம் இந்திய சந்தையிலும் பிரதிபலிக்க வாய்ப்பு இருப்பதால், MCX சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் மத்திய கிழக்கில் போர் நிலைமை மீண்டும் தீவிரமானால், தங்கம் விலை இந்திய சந்தையில் 10 கிராம் ரூ.1,70,000 வரை மற்றும் வெள்ளி ஒரு கிலோ ரூ.3,00,000 வரை உயர வாய்ப்பு இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தற்போதைக்கு முதலீட்டாளர்கள் லாப நோக்கில் விற்பனை செய்வதால் விலை சரிவுப் பாதையில் நகர்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Are you ready people Gold prices are about to plummet An unexpected twist in the international market


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->