கானா பாட்டு போட்டதால் வந்த வினை...! திருவிழா மோதலில் 2 பேர் படுகொலை...! - 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு...! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் அம்மன் கோவில் திருவிழாவின்போது ஏற்பட்ட தகராறு, இருதரப்பு மோதலாக வெடித்ததில் 2 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி பகுதியில் அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருவிழா நிகழ்ச்சியில் ஒலிபெருக்கியில் கானா பாடல்களை ஒலிக்கச் செய்வது தொடர்பாக சிலருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சிறிய அளவில் தொடங்கிய வாக்குவாதம், அடுத்தடுத்து முற்றி கைகலப்பாக மாறியது. இதையடுத்து இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் மோதல் தீவிரமடைந்தது. இந்த மோதலில் 2 பேர் படுகாயமடைந்து உயிரிழந்தனர்.சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவலர்கள் உடனடியாக அங்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதற்கிடையே, சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பதற்றமான சூழல் நிலவியது.மேலும், மோதல் மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் படுநெல்லி பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. சம்பவம் தொடர்பாக காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

reaction playing Ghana song 2 people killed festival clash More than 200 police deployed


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?




Seithipunal
--> -->