கரணம் தப்பினால் மரணம்.. ஆபத்தான முறையில் பேருந்து பயணம்.. இராமநாதபுரத்தில் பேரதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு போதுமான பேருந்து வசதி இல்லாததால், தனியார் பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் சோகம் அரங்கேறியுள்ளது. 

கொரோனா காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெற்று வந்தது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாகவும், கொரோனா பரவல் குறைந்ததால் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நயினார்கோவில் பகுதியில், பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்களின் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். 

ஆனால், இந்த கோரிக்கை இதுவரை போக்குவரத்துக் கழகத்தின் காதுகளுக்கும் சென்றதாக தெரியவில்லை. சென்றாலும், நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் தனியார் பேருந்துகளில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் நிலையில், தனியார் பேருந்துகளில் மாணவர்கள் செய்யும் சாகசங்கள், அவர்களின் உயிருக்கு ஆபத்தாக ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. 

தனியார் பேருந்துகளுக்கு உள்ளே செல்ல முடியாத அளவு கூட்டம் இருப்பதால், சுற்றுப்புற ஜன்னல் கம்பிகள் மற்றும் பின்புறம் உள்ள கம்பிகளை பிடித்து தொங்கியவாறு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அரசு போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்படாததால், அங்கு வரும் தனியார் பேருந்துகள் இதனை உபயோகப்படுத்தி இலாபம் பார்த்து வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram School Students Dangerous Ride Private Bus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->