முதுகில் அடிப்பவர்கள் குறித்து கவலை இல்லை...! சுயமரியாதை குறித்து பேசிய ரவி மோகன்
I dont care about those who stab me back Ravi Mohan spoke about self respect
சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மொழி உரிமை மற்றும் போராட்டக் களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன்,“ஜனவரி 10-ம் தேதி ‘பராசக்தி’ திரைக்கு வருது. அதை ஒரு திருவிழாவாகக் கொண்டாடுங்க. யார் என்ன பேசினாலும் பரவாயில்லை.
இது முழுக்க முழுக்க அண்ணன் - தம்பி பொங்கல்” என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் ரவி மோகன்,"பராசக்தி’ என்பது சுயமரியாதையை காப்பாற்றும் படம். நானும் என் சுயமரியாதையை காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறேன்.
முதுகில் குத்துபவர்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை; நேருக்கு நேர் நிற்பவர்களைப் பற்றிதான் கவலை. அனைவருக்கும் ஒரு அண்ணனாக சொல்கிறேன், யாரும் தங்களின் சுயமரியாதையை ஒருபோதும் இழக்க வேண்டாம்” என்று உருக்கமாக பேசினார்.
English Summary
I dont care about those who stab me back Ravi Mohan spoke about self respect