ஜன நாயகன் படத்தில் நடித்துள்ள விஜய்யின் அரசியல் தளபதி! இது வேற லெவல் டிவிஸ்ட்!
tvk vijay jana nayagan movie act N Anand
தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக எதிர்பார்க்கப்படும் 'ஜனநாயகன்', வருகிற ஜனவரி 9-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. மலேசியாவில் நடைபெற்ற பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து, நேற்று வெளியான இப்படத்தின் டிரெய்லர் யூடியூப்பில் 2.8 கோடி (28 மில்லியன்) பார்வைகளைக் கடந்து இமாலய சாதனை படைத்து வருகிறது.
இந்த டிரெய்லரில் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த ஒரு விஷயம், அதில் இடம்பெற்றுள்ள ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரமும் வசனமும்தான். டிரெய்லரின் தொடக்கத்திலேயே, “சம்பவம் பண்றவனைக் கேள்விப்பட்ருப்ப, அதுல ரெகார்ட் வச்சுருக்கவனைக் கேள்விப்பட்டிருக்கியா?” என்ற வசனம் அதிரடியாக ஒலிக்கிறது.
இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தான் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். டப்பிங்கில் வேறு ஒருவரின் குரல் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், தோற்றத்தைப் பார்க்கும்போது அது புஸ்ஸி ஆனந்தாகவே இருக்கும் என ரசிகர்கள் ஊகித்துள்ளனர்.
நிஜ வாழ்க்கையில் விஜய்யின் அரசியல் தளபதியாக இருக்கும் புஸ்ஸி ஆனந்த், விஜய்யின் கடைசித் திரைப் படத்திலும் அவருடன் இணைந்திருப்பது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் மற்றும் சினிமா என இரண்டையும் இணைக்கும் ஒரு குறியீடாகவே இந்தத் தோற்றம் பார்க்கப்படுகிறது.
English Summary
tvk vijay jana nayagan movie act N Anand