கமுதி: குடும்ப பிரச்சனையால் விபரீதம்.. பச்சிளம் குழந்தையுடன் உடலில் தீ வைத்து தாய் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி மேடிமன்னார்கோட்டை கிராமத்தை சார்ந்தவர் பொன்முருகன் (வயது 24). அங்குள்ள தொப்புளாக்காரை பகுதியை சார்ந்தவர் குருதேவி (வயது 20). இவர்கள் இருவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இவர்களுக்கு தற்போது மூன்று மாதமேயாகும் கைக்குழந்தை உள்ள நிலையில், பொன்முருகன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக, அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

இந்நிலையில், சம்பவத்தன்றும் வழக்கம்போல தகராறு ஏற்பட்டதும், பொன்முருகன் பணிக்கு சென்றுள்ளார். வீட்டில் கைக்குழந்தையுடன் தனியாக இருந்த நிலையில், தனது குழந்தையின் மீதும், தன் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

இருவரின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram Kamudi girl suicide with 3 month baby due to family Problem


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal