சோஷியல் மீடியா பழக்கத்தால் நேர்ந்த விபரீதம்...! சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 2 சிறுவர்கள் கைது...! - Seithipunal
Seithipunal


மராட்டிய மாநிலம் பால்கர் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் சமூக வலைதளத்தின் மூலம் 17 வயது சிறுவனுடன் பழகி வந்துள்ளார். நாள்தோறும் இருவரும் நீண்ட நேரம் உரையாடி வந்த நிலையில், அந்தப் பழக்கம் நாளடைவில் நெருக்கமாக மாறியதாக கூறப்படுகிறது.

கடந்த மாதம் 11-ந்தேதி சிறுவன், சிறுமியை நேரில் சந்தித்து பேச வேண்டும் எனக் கூறி, அப்பகுதியில் உள்ள சாவடிக்கு வருமாறு அழைத்துள்ளார். அவரது பேச்சை நம்பிய சிறுமியும் அங்கு சென்றுள்ளார்.

அங்கு தனது நண்பருடன் காத்திருந்த சிறுவன், சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று ஆள்நடமாட்டம் குறைந்த பகுதிக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு இருவரும் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதனை செல்போனில் பதிவு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே, சிறுமியின் உறவினர் ஒருவர் சமூக வலைதளத்தில் சிறுமி தொடர்பான ஆபாச காணொலி பரவி வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக சிறுமியிடம் விசாரித்தபோது, தனக்கு நேர்ந்த கொடுமையை அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சிறுமியின் குடும்பத்தினர் காவலர்களிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவலர்கள், போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் இரு சிறுவர்களையும் கைது செய்தனர்.

சமூக வலைதளப் பழக்கம் மூலம் சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம் பால்கர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragedy caused by social media addiction 2 boys arrested gang harassment girl


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->