ரமலான் நோன்பு.. ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய இஸ்லாமியர்கள்!
Ramadan fasting Muslims donate food to the poor!
நெல்லை மாவட்டம் மானூர் தாலுகா குறிச்சிகுளம் கிராமத்தில் ரமலானை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் நூறு குடும்பங்களுக்கு பத்து நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மின்னல் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டன.
ரமலான் நோன்பை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்களை மின்னல் டிரஸ்ட் நிறுவனர் எஸ்.மில்லத் இஸ்மாயில் வழங்கினார்.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஒன்பதாவது மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள், இந்த நோன்பு என்பது மரியாதைக்குரிய அடையாளமாகவும் ,தங்களை தூய்மைப்படுத்த அல்லாஹ்வின் கருணையை பரவும் இஸ்லாமியர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்,
அந்த வகையில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் உணவு ,தண்ணீரில் இன்றி நோன்பு இருப்பார்கள். பிறை கணக்கு படி 29 அல்லது 30 நாட்கள் வரை இஸ்லாமியர்கள் இந்த நோன்பை கடைபிடிப்பர், இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றனர், அது மட்டும் அல்லாமல் தொழுகையில் ஈடுபடும் இஸ்லாமியர்கள் ஏழை எளியவர்களுக்கு பல்வேறு உதவிகளும் செய்து வருகின்றனர்
நெல்லை மாவட்டம் மானூர் தாலுகா குறிச்சிகுளம் கிராமத்தில் ரமலானை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் நூறு குடும்பங்களுக்கு பத்து நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மின்னல் அறக்கட்டளை சார்பில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நெஸ்ட் பில்டர்ஸ் அதிபர் . சித்திக் நியமத்துல்லாஹ் தலைமை தாங்கினார். குறிச்சிகுளம் மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜனாபா. மெஹர் பானு, முன்னிலை வகித்தார்.ரமலான் நோன்பை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்களை மின்னல் டிரஸ்ட் நிறுவனர் எஸ்.மில்லத் இஸ்மாயில் வழங்கினார்.நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ்.இஸ்மாயில் பக்கீர் ஜனாப்.இட்லி மைதீன் கலந்து கொண்டனர் கோயிலப்பா. பீர், நன்றி கூறினார் இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் பயன் பெற்றனர்.
English Summary
Ramadan fasting Muslims donate food to the poor!