வாக்கு திருட்டுக்கு எதிராக ராகுல் காந்தியின் யாத்திரை – தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்!
Rahul Gandhi march against vote rigging Tamil Nadu Chief Minister Stalin will participate
வாக்கு திருட்டு மற்றும் தேர்தல் முறைகேடுகளை எதிர்த்து, காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி புதிய யாத்திரையை தொடங்கியுள்ளார். இந்த யாத்திரை நாடு முழுவதும் அரசியல் சூழ்நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்ததாவது:இந்த யாத்திரையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வரும் 26, 27-ம் தேதிகளில் கலந்து கொள்கிறார்.27-ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார்.29-ம் தேதி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இணைகிறார்.
அதேபோல், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சுகு உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர்.
மேலும் பல மாநிலங்களின் எதிர்க்கட்சித் தலைவர்களும் இதில் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த யாத்திரை எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் வகையில் அரசியல் ரீதியாக மிகப் பெரிய முக்கியத்துவம் பெறுகிறது எனக் கூறப்படுகிறது.
English Summary
Rahul Gandhi march against vote rigging Tamil Nadu Chief Minister Stalin will participate