'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம்..இன்று சென்னை மக்களுக்கு அழைப்பு!  - Seithipunal
Seithipunal


பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேலும் 14 “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம்கள் இன்று நடைபெறவுள்ளது. 

அனைத்து மாவட்டங்களிலும் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி வைக்கும் விதமாக, 02.08.2025 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியில் முதல் மருத்துவ முகாமினை  முதல்-அமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேலும் 14 “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது. அதனடிப்படையில், இன்று  ஆலந்தூர் மண்டலம், ஏ.ஜெ.எஸ். நிதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இந்த மருத்துவ முகாம்கள் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதயவியல் மருத்துவம்,  மற்றும் ஸ்கேன் பரிசோதனை ஆகிய 17 சிறப்பு மருத்துவர்களின் மருத்துவ ஆலோசனைகள், பரிசோதனை ஆகிய மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது.


மேலும், முதல்-அமைச்சரின் விரிவாக மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்குதல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரச்சாரம் போன்ற இணைச் சேவைகளும் வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Stalin for Welfare scheme camp Invitation to the people of Chennai today


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->