விஜய் பேசியதற்கு அதிமுக தான் பதில் சொல்ல வேண்டும் - திருமாவளவன்.!
thirumavalavan speech about tvk leader vijay madurai conference
நேற்று முன்தினம் மதுரையில் தவெக கட்சியின் 2வது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், தவெக தலைவர் விஜய் அதிமுக குறித்து பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார். அதாவது:-
"அதிமுக தான் அதுகுறித்து பதில் சொல்ல வேண்டும். நான் எம்ஜிஆரை பற்றி சொன்ன உடனயே ஆ.. ஊ.. என்று எகிறிக் குதித்தவர்கள் இப்போது வாயை மூடிக்கொண்டுள்ளனர்.
எம்ஜிஆர், அண்ணா, பெரியாரைப் பற்றி மிகவும் கொச்சையாக பேசுகிற பாஜகவினரை பற்றி அதிமுகவினர் ஒரு வார்த்தை கூட கண்டிக்கவில்லை.

தற்குறி எடப்பாடி பழனிசாமி என்று பேசியவர் அண்ணாமலை. அப்போது அவர்கள் வாயை மூடிக்கொண்டு எங்கேயோ மவுனித்து கிடந்தார்கள். வாய் திறந்து பேசவில்லை. சமூகத்தில் இருக்கின்ற விமர்சனங்கள் இப்படி இருக்கின்றன என்று யாரோ சொன்னதை மேற்கோள் காட்டி பேசினேன். உடனே பாய்ந்து, பிராண்டினார்கள்.
இப்போது விஜய் சொன்னதற்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்று நீங்கள் கேட்டு சொல்லுங்கள்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
thirumavalavan speech about tvk leader vijay madurai conference