பயங்கரவாதத்திற்கு எதிராக ஜோர்டான் நாடு தெளிவான நிலைப்பாடு; பிரதமர் மோடி பாராட்டு..! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக, ஜோர்டான் நாட்டுக்கு சென்றுள்ளார். விமான நிலையத்தில் அந்நாட்டு பிரதமர் ஜாபர் ஹசன் மோடியை வரவேற்றார். அதன் பின்னர் ஜோர்டான் மன்னர் 02-ஆம் அப்துல்லா பின் அல் ஹுசைன் உடன் பிரதமர் மோடி பேச்சு நடத்தினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

ஜோர்டானுக்கு தனது பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் என்றும்,  பயங்கரவாதத்திற்கு எதிராக ஜோர்டான் நாடு தெளிவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.  அத்துடன், காசா பிரச்சினையில்ஜோர்டான்  ஆரம்பத்திலிருந்தே மிகவும் சுறுசுறுப்பான பங்களிப்பை வழங்கி வருவதாகவும், இப்பகுதியில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நிலவும் என்று நாங்கள் அனைவரும் நம்புகிறோம் என்று பேசியுள்ளார்.

மேலும், ஜோர்டான் பயங்கரவாதத்திற்கு எதிராகவும், அனைத்து மனிதகுலத்திற்கும் ஒரு வலுவான செய்தியை அனுப்பி உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். இதனை தொடர்ந்து பேசிய ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைன் கூறியதாவது:

பிரதமர் மோடியின் வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான பல ஆண்டு கால நட்பு, பரஸ்பர மரியாதையை பிரதிபலிக்கிறது என இந்தியாவும், ஜோர்டானும் வலுவான கூட்டாண்மையையும், தொலை நோக்குப் பார்வையையும் கொண்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பல ஆண்டுகளாக, இருநாடுகளுக்கு இடையே உறவுகள் பல துறைகளில் விரிவடைந்துள்ளதாகவும், தொழில், விவசாயம் மற்றும் எரிசக்தி போன்ற பல துறைகளில் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த உதவும். இவ்வாறு மன்னர் இரண்டாம் அப்துல்லா  பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Modi praised Jordan for its clear stance against terrorism


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->