ஈரோடு த.வெ.க., கூட்டத்துக்கு 84 நிபந்தனைகள் விதித்துள்ள போலீசார்..! - Seithipunal
Seithipunal


வரும் 18-ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் நடக்கவிருக்கும் தவெக கூட்டத்திற்கு 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டதில் பெருந்துறையை அடுத்த சரளையில் த.வெ.க., பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் உள்ளிட்ட கட்சியின் முக்கியமானவர்கள் கலந்துகொள்கின்றனர். 

இதற்கு ஈரோடு மாவட்ட போலீசார், 84 நிபந்தனைகள் விதித்துள்ள பட்டியலை பெருந்துறை பகுதி கட்சி பொறுப்பாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, போலீசார் விதித்துள்ள முக்கியமான நிபந்தனைகள்:

பிரசார வேனை சுற்றி நான்கு புறமும் மக்களுக்கும், வேனுக்கும் இடையே, 50 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

மக்கள் உள்ளே, வெளியே வந்து செல்வது குறித்த வரைபடம்.

பொதுமக்கள் வந்து செல்லும் போது தள்ளுமுள்ளு இல்லாத வகையில் கூட்டத்தை கட்டுப்படுத்த தன்னார்வலர்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.

மனுவில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் மக்கள் வர அனுமதிக்க கூடாது.

மருத்துவ குழு மற்றும் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ய வேண்டும். எத்தனை மருத்துவ குழு, எத்தனை ஆம்புலன்ஸ் நிறுத்தப்படும் என்ற விபரத்தை அளிக்க வேண்டும்.

'சிசிடிவி' கேமரா, எல்.இ.டி. திரைகளின் எண்ணிக்கை விபரம் வழங்க வேண்டும்.

அவசர காலத்தில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து செல்லும் வகையில் தனி வழி விட வேண்டும்.

மின் கம்பங்கள், மரங்கள், உயரமான கட்டடங்கள், விளம்பர போர்டுகள் மீது தொண்டர்கள் ஏறி நிற்காமல் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு 84 நிபந்தனைகளை போலீஸ் தரப்பில் விதிக்கப்பட்டுள்ளதாக, பெருந்துறை பகுதி த.வெ.க., நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The police have imposed 84 conditions for the TVK campaign meeting in Erode


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->