'வாரணாசிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை 14 கோடியாக அதிகரிக்க முக்கிய காரணம்'; ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜலிங்கம் தகவல்..!
Varanasi Divisional Commissioner Rajalingam informed that the number of devotees visiting Varanasi has increased
உத்தர பிரதேசத்தில் அயோத்தியில் பாலராமர் கோவில் திறந்தபின், வாரணாசிக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வாரணாசி வருவாய் துறை கோட்ட கமிஷனர் ராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லுாரைச் சேர்ந்தவர் இவர், 2006-இல், உ.பி., பிரிவு ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்ற ஆசை ராமலிங்கத்திற்கு இருந்ததால், மீண்டும் தேர்வு எழுதிய அவர், கடந்த 2009-இல் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்ச்சி பெற்று, உ.பி.,யின் வாரணாசியில் கோட்ட கமிஷனராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக, தமிழகத்தில் இருந்து வாரணாசிக்கு அழைத்துச் செல்லப்பட்ட செய்தியாளர்களுக்கு, அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

தமிழகத்திற்கும் காசிக்கும் வரலாற்று ரீதியாக நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும், ஆதி சங்கராச்சாரியார் காசிக்கு நடந்து வந்து, சீடர்களுக்கு வேதங்களை கற்பித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், காசிக்கு வரும் பக்தர்கள், தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் செல்வதை வழக்கமாக வைத்துள்ளதாகவும், காசி என அழைக்கப்படும் வாரணாசி நகரம், தெருக்கள் நிறைந்தது; மக்கள் அடர்த்தியும் அதிகம். இங்கு, 30 லட்சம் பேர் வசிக்கின்றனர். தற்போது தினசரி பக்தர்களின் வருகை, இரண்டு லட்சத்தை தாண்டி விட்டது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கடந்த ஆண்டு வாரணாசிக்கு வருகை தந்த பக்தர்களின் எண்ணிக்கை, 11 கோடியாக இருந்ததாகவும், அயோத்தியில் பால ராமர் கோவில் திறப்புக்கு முன், ஆண்டுக்கு, ஒரு கோடி பக்தர்களே வருகை தந்துள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், அயோத்தி ராமர் கோவில் திறப்புக்கு பின், பக்தர்களின் வருகை பல கோடியை தாண்டி விட்டதாகவும், இந்த ஆண்டில், செப்டம்பர் வரையான காலப்பகுதியில், 14 கோடியை தாண்டி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் 'ஒரே பாரதம்; உன்னத பாரதம்' என்ற தொலைநோக்கு பார்வையுடன் கூடிய திட்டத்தின் கீழ், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரைவதை குறிப்பிட்ட அவர், அதன்படி, காசிக்கும், தமிழகத்திற்கும் வரலாற்று சிறப்புமிக்க இணைப்பை வலுப்படுத்தும் விதமாக, நான்கு ஆண்டுகளாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு, 'தமிழ் கற்கலாம்' என்ற கருப்பொருளில் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

அத்துடன்,சங்கமத்தின் இறுதி நாள் நிகழ்ச்சி, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் நடத்தப்படும். அதற்காக, வாரணாசியில் இருந்து 300 மாணவர்கள் தமிழ் கற்க, தமிழகம் செல்ல உள்ளனர என்று தெரிவித்துள்ளார். ஆசியாவிலேயே முதன்முதலாக, பிரதமர் மோடி, 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 'ரோப் கார்' திட்டத்தை, 2023-இல் துவக்கி வைத்தார். இப்பணிகள், 99 சதவீதம் நிறைவு பெற்று விட்டன என்று அறிவித்துள்ளார்.
மேலும் குறித்த ரோப் கார் சேவை, வாரணாசி ரயில் நிலையத்தில் இருந்து காசி விஸ்வநாதர் கோவில் வரை இயக்கப்படுகிறது. இச்சேவை காரணமாக, 16 நிமிடங்களில் கோவிலுக்கு சென்று விடலாம். சாலை மார்க்கமாக சென்றால், ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்று உ.பி.,யின் வாரணாசியில் கோட்ட கமிஷனராக பணியாற்றும் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
English Summary
Varanasi Divisional Commissioner Rajalingam informed that the number of devotees visiting Varanasi has increased