விசாக்கள் மறுபரிசீலனை.. இந்தியர்களுக்கு சிக்கல்..? டிரம்ப் சொன்னது என்ன?
Reflections on visas A problem for Indians? What did Trump say?
அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாடுகளை சேர்ந்த 5.5 கோடி பேரின் விசாக்களை மறுபரிசீலனை செய்யப்படும் என்று என்று டிரம்ப் அரசு தெரிவித்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த கோடிக்கணக்கானோர், அமெரிக்காவில் பணி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்களை பெற்று அங்கு வசிக்கிறார்கள். இதனிடையே இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்று கொண்டார், அவர் பதவியேற்று முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார் ,குறிப்பாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டார், அத்துடன் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு வர்த்தக ரீதியிலான வரி விதிப்பை அதிகப்படுத்தி அதிர்ச்சி அடை செய்தார் ,இதனால் இந்த வரி விதிப்பால் உலக நாடுகள் அதிருப்திய அடைந்தனர்,
இந்தநிலையில் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாடுகளை சேர்ந்த 5.5 கோடி பேரின் விசாக்களை மறுபரிசீலனை செய்யப்படும் என்று அந்த நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்தது.
இந்த சோதனையின்போது விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது முறைகேடாக விசா பெற்று இருப்பவர்கள் உடனடியாக நாடுகடத்தப்படுவார்கள் என்று டிரம்ப் அரசு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தனது எக்ஸ்தள பதிவில், ‘அமெரிக்காவில் ஓடும் லாரிகளில் வெளிநாடுகளை சேர்ந்த டிரைவர்கள் அதிக எண்ணிக்கையில் பணியாற்றி வருகிறார்கள். இது அமெரிக்க லாரி டிரைவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. எனவே இனி வெளிநாடுகளில் இருந்து வரும் லாரி டிரைவர்களுக்கு, அமெரிக்க விசா வழங்குவது நிறுத்தப்படும். என்று குறிப்பிட்டுள்ளார்.
விதிகளை மீறியவர்களுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை என்பதால் இந்தியர்கள் அனைவரும் அச்சப்படத் தேவையில்லை என்று கூறப்படுகிறது.
English Summary
Reflections on visas A problem for Indians? What did Trump say?