நகைக்காக செய்யப்பட்ட கொடூரமா...? கோவையில் மூதாட்டி பயங்கரமான முறையில் கொலை...! - வேலைக்கார பெண் தப்பியோட்டம் - Seithipunal
Seithipunal


கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் வசித்து வந்த கஸ்தூரி (82) என்ற மூதாட்டி தனது வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது கணவர் குட்டி இறந்துவிட்டார்.

கஸ்தூரிக்கு ராம்குட்டி என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். மகன் ராம்குட்டி கோவை பிச்சனூரில் மருத்துவமனை நடத்தி வரும் டாக்டராக உள்ளார். மகனும் மகள்களும் அருகருகே வசித்து வந்த நிலையில், கஸ்தூரி மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்தார்.

அவரை கவனிக்க நேபாளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வேலைக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.இன்று காலை கஸ்தூரியின் மகள் தாயாருக்கு போன் செய்தபோது எடுக்கப்படாததால் சந்தேகம் ஏற்பட்டது.

அருகில் வசிக்கும் பெண் ஒருவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, கஸ்தூரி கை, கால்கள் துணியால் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து ராமநாதபுரம் காவலருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இந்தச் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள்விசாரணை மேற்கொண்டதில், கஸ்தூரி அணிந்திருந்த பெரும்பாலான நகைகள் இருந்தபோதிலும் 2 பவுன் செயின் மட்டும் மாயமாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் நகைக்காக கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.மேலும், கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்ததுடன், கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.

குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கஸ்தூரியை கவனித்த நேபாள பெண் இன்று வேலைக்கு வராததால் அவர்மீதும் காவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.மருத்துவரின் தாயை கொலை செய்து நகை கொள்ளையடிக்கப்பட்ட இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

crime committed jewelry old woman brutally murdered Coimbatore Servant girl escapes


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->