சந்தோஷ் நாராயணன் இசையில், தீயின் புதிய இசை ஆல்பம் வாரி வாரி வெளியீடு..!
Dhees New Music Album Vaari Vaari Released Composed by Santhosh Narayanan
'பீட்சா வில்லா' படத்தில் இடம்பெற்ற Disco Woman என்ற பாடல் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் தீ. இவர், குக்கூ, மெட்ராஸ், இறுதிச்சுற்று, இறைவி, மேயாதமான், காலா, பிகில், ஜெயிலர் எனப் பல படங்களில் வெற்றிப்பாடல்களை பாடியுள்ளார். அதிலும் தனுஷின் மாறி 02 படத்தில் பாடிய 'ரௌடி பேபி' பாடல் பட்டி தொட்டி எங்கும் வைரலானது.
இவரது, இன்டிபென்டன்ட் பாடலான 'என்ஜாயி எஞ்சாமி' பாடலை அறிவுடன் இணைந்து பாடி மிகப்பெரிய புகழ்பெற்றார். அதன் பிறகு வோண்டாகர்ள் மற்றும் திவா சாவேஜ் ஆகியோருடன் இணைந்து 'Ancient Seed' மற்றும் எட் ஷீரனுடன் இணைந்து 'Don’t Look Down' போன்ற சர்வதேச அளவிலான பாடல்களில் பிரபலமானார்.
இந்நிலையில், தனது அடுத்த பாடலாக 'வாரி வாரி' என்ற இண்டி பாடலை வெளியிட்டுள்ளார் தீ. தந்தை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையிலும், கவிஞர் விவேக் எழுதிய வரிகளுடனும், விஸ்வா ரெக்கார்ட்ஸுடன் இணைந்து, தனது அடுத்த பாடலை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக தீ குறிப்பிட்டுள்ளதாவது; ''இந்த பாடல் நம்மை விட்டு பிரிந்து இனி இல்லாத ஒருவரையோ அல்லது ஒன்றையோ பற்றியது. தொலைந்து போன ஒரு உணர்வை பற்றியது. இந்தப் பாடல் முழுவதுமே வழியில் நீங்கள் தொலைத்திருக்கக் கூடிய உங்களைத் தேடி, அந்த உணர்வை மீண்டும் பெற முயற்சிப்பது '' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Dhees New Music Album Vaari Vaari Released Composed by Santhosh Narayanan