வைபவ் சூர்யவன்ஷி அதிரடி சதம் வீண்: ராஜஸ்தானை 05 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத் அணி..!
Hyderabad Defeats Rajasthan by 5 Wickets
19-வது ஐபிஎல் தொடரில் 35 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 05 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைத் வீழ்த்தி புள்ளி பட்டியலில் 03-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மற்றும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி காட்டினார். மொத்தம் 37 பந்துகளைச் சந்தித்த அவர், 12 சிக்ஸர்கள் மற்றும் 05 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் குவித்தார். ஐபிஎல் போட்டியில் இரண்டாவது சத்தை அடித்துள்ளார். இவரது அதிரடியால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 06 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் என்ற இலக்கை எட்டியது.

229 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி அதிரடி காட்டினார். இதில் இஷான் கிஷன் 31 பந்துகளில் 74 ரன்களும், அபிஷேக் சர்மா 29 பந்துகளில் 57 ரன்களும் விளாசினர். அடுத்து, ஹென்றிச் கிளாசென் (29) மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி (36) ஆகியோர் அதிரடியாக ஆடினர்.
இறுதியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 18.3 ஓவர்களிலேயே 05 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் பிரிஜேஷ் சர்மா தலா 02 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
English Summary
Hyderabad Defeats Rajasthan by 5 Wickets