என் வாழ்க்கையில் அவங்க வந்த பிறகு எல்லாம் நல்லதே!.. வராஹி அம்மன் என்னைத் தேர்ந்தெடுத்தார்.. உருகும் ஸ்ருதி ஹாசன்
Everything is good after she came into my life Varahi Amman chose me Melting Shruti Haasan
பின்னணி பாடகியாக தொடங்கி நடிகையாக முன்னணி இடத்தைப் பிடித்துள்ள ஸ்ருதி ஹாசன், தற்போது தனது ஆன்மிக அனுபவம் குறித்து பகிர்ந்துள்ள கருத்துகள் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளன.
கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி, தமிழ் சினிமாவில் ‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதற்கு முன்பே ‘ஹே ராம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து நடித்துவரும் அவர், இசையிலும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
தற்போது மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘ட்ரெய்ன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அவரது கேரியரில் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், சாய் அபயங்கர் இசையில் வெளியாகிய ‘பவழ மல்லி’ பாடல் மூலம் பாடகியாகவும் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் ஒரு யூடியூப் பேட்டியில் ஸ்ருதி ஹாசன் தனது ஆன்மிக அனுபவத்தை பகிர்ந்துள்ளார். “நாம் மட்டும் கடவுளைத் தேடுவதில்லை; கடவுள்களும் நம்மைத் தேர்ந்தெடுக்கிறார்கள்” என்ற அவரது கருத்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர் கூறுகையில், “சமீபத்தில்தான் என் வாழ்க்கையில் வராஹி அம்மன் வந்தார்கள். சென்னையில் உள்ள ஒரு சிறிய கோயிலுக்கு நண்பர் ஒருவர் அழைத்து சென்றார். அது பெரிய கோயில் அல்ல, ஆனால் உள்ளே சென்றவுடனேயே ஒரு ஆழமான பக்தி உணர்வு ஏற்பட்டது. எந்த ஆடம்பரமும் இல்லாத அந்த இடத்தில் உண்மையான ஆன்மிகத்தை உணர்ந்தேன். வராஹி அம்மன் என் வாழ்க்கையில் மிகச் சக்திவாய்ந்தவர்” என்று தெரிவித்துள்ளார்.
சினிமா, இசை என இரு துறைகளிலும் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்ருதி, தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களையும் திறந்த மனதுடன் பகிர்வது ரசிகர்களிடையே அவருக்கான ஈர்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
English Summary
Everything is good after she came into my life Varahi Amman chose me Melting Shruti Haasan