அந்த போட்டிக்கு வர வாய்ப்பு? தோனி எப்போது மீண்டும் சி.எஸ்.கே அணியின் பிளேயிங் லெவனுக்கு திரும்புவார் – உண்மையை உடைத்த ஹஸி! - Seithipunal
Seithipunal


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 2026 ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக இதுவரை விளையாடாதது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. தொடருக்கு முன்பாக ஏற்பட்ட காயம் காரணமாக அவர் முதல் 7 போட்டிகளை தவறவிட்டுள்ளார்.

தற்போது 46 வயதான தோனிக்கு இது கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், அவர் எப்போது மீண்டும் அணியில் இணைவார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

இந்நிலையில், சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அவரது பேச்சுப்படி, தோனி தற்போது காயத்திலிருந்து வேகமாக மீண்டு வருகிறார். வலைப்பயிற்சியில் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். ஆனால் இன்னும் முழுமையான உடற்தகுதி (100% fitness) எட்டவில்லை.

“தோனி களத்தில் ஓடும் திறன் மிகவும் முக்கியம். குறிப்பாக அவர் இறுதிக்கட்டத்தில் பேட்டிங் செய்யும்போது வேகமாக ரன் எடுக்க வேண்டிய சூழல் இருக்கும். அதனால் முழு உடற்தகுதி கிடைத்த பிறகே அவர் அணிக்கு திரும்புவார்” என ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ஃபிட்னஸ் காரணமாக அவர் களமிறங்கவில்லை. இதனால், இன்னும் சில போட்டிகளுக்குப் பிறகே தோனி பிளேயிங் லெவனில் சேர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

அதே நேரத்தில், அவர் திரும்பும் போது நிச்சயம் விக்கெட் கீப்பராகவே விளையாடுவார் எனவும் ஹஸ்ஸி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனால், தோனியின் ரிட்டர்ன் இன்னும் கொஞ்சம் தாமதமாகலாம் என்றாலும், அவர் முழு உடற்தகுதியுடன் களமிறங்குவதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chances of making it to that match When will Dhoni return to CSK playing eleven Hussey breaks the truth


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->