'பிளாஸ்ட்' திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகும் KGF இசையமைப்பாளர்..! - Seithipunal
Seithipunal


'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படத்திற்கு 'பிளாஸ்ட்' என பெயரிடப்பட்டு,படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளிஇடப்பட்டுள்ளது. ஜான் கொக்கேன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா, பாலா ஹசன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில்  நடித்துள்ளனர்.

இந்த படத்தை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநராக இருந்த சுபாஷ் கே ராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். 'லவ் டுடே', 'டிராகன்' மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28-வது படமாக AGS நிறுவனம் 'பிளாஸ்ட்' திரைப்படத்தை உருவாக்கியுள்ளது. 

இந்த படத்திற்கு 'கே ஜி எஃப்' படத்தில் தனது அதிரடி இசை மூலம் கவனத்தை ஈர்த்த ரவி பஸ்ரூர் இந்த படத்தின் மூலம் தமிழ் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படத்தொகுப்பு என வலுவான கூட்டணி இணைந்துள்ளது.

இந்த திரைப்படம் குறித்து பேசிய படத்தின், இயக்குநர் சுபாஷ் கே ராஜ், "அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் ஆக்ஷன் திரைப்படமாக இது அமைந்துள்ளது. தாய், தந்தை, மகள் ஆகியோரைக் கொண்ட அன்பான குடும்பத்திற்கும் தீமை ஒன்றையே குறிக்கோளாக கொண்ட, எதற்கும் துணிந்த ஒரு பயங்கர கும்பலுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள் தான் 'பிளாஸ்ட்' திரைப்படத்தின் மையக்கரு. எனது முதல் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம்  தயாரித்து இருப்பதையும் அதில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களை  இயக்கியதையும் மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The KGF Music Composer Makes His Kollywood Debut with the Film Blast


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->