ஐபில் வரலாற்றில் சேஸிங்கில் தனது சொந்த சாதனையை முறியடித்து மீண்டும் நம்பர் 1 ஆன பஞ்சாப் அணி; 264 ரன்கள் எடுத்தும் அதிர்ச்சி தோல்வியடைந்த டெல்லி அணி..!
Punjab Kings reclaim the number one spot in IPL history for successful chases, breaking their own record
19 வது ஐபிஎல் தொடரில் 34 வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி அதிகபட்ச ரன்களை வெற்றிகரமாக சேஸிங் செய்து இன்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. டெல்லி அணிக்கு எதிராக இன்று டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் நடந்த போட்டியில் முதல் இன்னிங்க்சில் டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 265 ரன்கள் என்ற இமாலய இலக்கை ரன்களாக அடித்தது. இதனை பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிகரமாக சேஸிங் செய்து போட்டியில் வெற்றிப்பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக 2024-இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிராக இதே பஞ்சாப் அணி 262 ரன்களை சேஸிங் செய்ததே சாதனையாக இருந்தது. தற்போது தனது சொந்த சாதனையைத் தானே முறியடித்துள்ளது.
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 02 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 67 பந்துகளில் 16 சிக்சர் 09 பவுண்டரியுடன் 152 ரன்கள் எடுத்தார். அவருடன் ஈடுகொடுத்து ஆடிய நிதிஷ் ரான 91 ரன்கள் எடுத்தார். அதிகமான ஸ்கோர் என்பதால் டெல்லி அணி வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் இருந்ததாக கருதப்பட்டது.

ஆனால், 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்கள் பிரப்சிம்ரன் சிங் – பிரியன்ஷ் ஆர்யா அதிரயாக ரன்கள் குவித்து பஞ்சாப் அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர்.
இவர்கள் இருவரும் பவர் பிளே (6.5) ஓவர்களில் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 126 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில், ஆர்யா 42 ரன்களில் ஆட்டமிழக்க தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரப்சிம்ரன் சிங் 26 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கூப்பர் கொனோலி 17 ரன்னிலும், நேகல் வதேரா 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அப்போது கொஞ்சம் சறுக்கிய பஞ்சாபி அணிக்கு அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார். இவர் 36 பந்துகளை எதிர்கொண்ட அவர் 07 சிக்சருடன் 71 ரன்கள் குவித்தார்.
அவருக்கு உறுதுணையாக சஷாங்க் சிங் 19 ரன்கள் சேர்க்க 18.5 ஓவர்களில் பஞ்சாப் அணி 265 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முன்னதாக 2024-இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிராக இதே பஞ்சாப் அணி 262 ரன்களை சேஸிங் செய்ததே சாதனையாக இருந்தது. தற்போது தனது சொந்த சாதனையைத் தானே முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளது.
English Summary
Punjab Kings reclaim the number one spot in IPL history for successful chases, breaking their own record