மதுராந்தகத்தில் பறக்கும் படையினர் அதிரடி; வாகன சோதனையில் ரூ.47.10 லட்சம் ரொக்கம் பறிமுதல்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு  வரும் 06-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளன. மாவட்ட தேர்தல் நிர்வாகம் சார்பில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட எல்லை பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா அல்லது பரிசு பொருட்களை வழங்குவது என தேர்தல் விதி மீறல்கள் போன்றவற்றை கண்காணிக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, மதுராந்தகம் அடுத்த ராமாபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வந்தவாசியில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில்,  ரூ.31 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயும், மற்றும் மற்றொரு காரில் ரூ.80 ஆயிரம் ரூபாயும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அத்துடன், அச்சிறுப்பாக்கம் பஜார் வீதியில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்ட போது, காரில் ரூ.2 லட்சம் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்வது தெரிந்தது. மேலும், சோத்துப்பாக்கம் அருகே தனியார் தங்கும் விடுதியில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்ட போது ரூ.13 லட்சம் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்றதையும் பறிமுதல் செய்துள்ளனர்.

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்ததால், தேர்தல் நடத்தை விதி காரணமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.47 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கத்தை, தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில், மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Flying squad seizes rs 47 lakh in cash during vehicle checks in Maduranthakam


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->