கன்னியாகுமரியில் தமிழக பாஜக சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு யாத்திரை..!
Anti drug awareness rally in Kanyakumari organized by the Tamil Nadu BJP
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய சிறுபான்மை அணி செயலாளர் முன்னெடுத்துள்ள போதை ஒழிப்பு விழிப்புணர்வு யாத்திரை, கன்னியாகுமரியில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது
இந்நிலையில், ''போதைப் பழக்கத்திலிருந்து இளைய தலைமுறையை பாதுகாத்து, ஆரோக்கியமான மற்றும் வலிமையான சமூகத்தை உருவாக்குவதற்கான இத்தகைய விழிப்புணர்வுப் பணிகள் காலத்தின் தேவையாகும்''. என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
''மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் உயரிய சிந்தனையான “போதை இல்லா பாரதம்” என்ற இலக்கை முன்னிறுத்தி, நம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய சிறுபான்மை அணி செயலாளர் திரு. சயீத் இப்ராகிம் அவர்கள் முன்னெடுத்துள்ள போதை ஒழிப்பு விழிப்புணர்வு யாத்திரை, கன்னியாகுமரியில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் திருநெல்வேலி வடக்கு மாவட்டத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு யாத்திரையில் பங்கேற்று, போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன். போதைப் பழக்கத்திலிருந்து இளைய தலைமுறையை பாதுகாத்து, ஆரோக்கியமான மற்றும் வலிமையான சமூகத்தை உருவாக்குவதற்கான இத்தகைய விழிப்புணர்வுப் பணிகள் காலத்தின் தேவையாகும்.
இந்நிகழ்வில் திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவர் திரு. முத்து பலவேசம் அவர்கள் மற்றும் திருநெல்வேலி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.'' என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
Anti drug awareness rally in Kanyakumari organized by the Tamil Nadu BJP