'மாணவர்களுக்கு மாட்டிறைச்சி உணவு விவகாரத்தை முன்னிறுத்தி, தமிழகத்தில் மத அரசியல் செய்ய முயற்சி'; அமைச்சர் வன்னி அரசு.! - Seithipunal
Seithipunal


''வடமாநிலங்களைப்போல் மாட்டிறைச்சி உணவு விவகாரத்தை முன்னிறுத்தி, தமிழகத்திலும் மத அரசியல் செய்ய ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகள் முயற்சி செய்கின்றன'' என  அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்  பேசிய அவர் மேலும் கூறியதாவது:

தவெக அரசின் கடந்த நான்கு மாத கால சிறப்பான செயல்பாடுகளும், முதல்வரின் திட்டங்களும் மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணிக்கான வெற்றி உறுதியானது என்றும், இடைத்தேர்தலில் தலைவர்கள், தீவிரமாக பரப்புரை செய்வதை வைத்து தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறமுடியாது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாமக எடுக்கும் முடிவுகள் அனைத்தும், பாஜகவின் விருப்பத்துக்கு உட்பட்டதாகவே உள்ளன. எனவே, பாமக தங்கள் ஓனரான பாஜகவை கேட்டுவிட்டுதான், இந்தக் கூட்டணியில் இணைவதா வேண்டாமா என்று முடிவு செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமூக நீதி, மாநில உரிமை, சனாதன எதிர்ப்பு மற்றும் திராவிடக் கோட்பாடுகளின் அடிப்படையில் திமுகவும், விசிகவும் ஒரே பாதையில் பயணிக்கும் இயக்கங்களாகவே உள்ளன என்று குறிப்பிட்டதோடு, இப்போது தேர்தல் சூழ்நிலை காரணமாக அணி மாறி இருந்தாலும், கோட்பாடு அடிப்படையில் நாங்கள் ஒன்றாகத்தான் பயணிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், மாணவர் விடுதி ஒன்றில் நாங்கள் ஆய்வு நடத்தியபோது, அங்கு மாணவர்கள், மட்டனுக்குப் பதிலாக, மாட்டிறைச்சி வேண்டும் என்று கேட்டனர். நான் அதை பரிசீலிப்போம் என்று மாணவர்களிடம் கூறினேன். ஆனால், அதில் முடிவு எடுக்கும் அதிகாரம் முதல்வருக்குதான் உள்ளது என்று குறிப்பிட்டதோடு, அதேநேரம், இதைப் பயன்படுத்தி வடமாநிலங்களைப்போல் மாட்டிறைச்சி உணவு விவகாரத்தை முன்னிறுத்தி, தமிழகத்திலும் மத அரசியல் செய்ய ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகள் முயற்சி செய்கின்றன. இத்தகைய மதவாத அரசியலுக்கு தமிழகத்தில் ஒருபோதும் இடம் கிடையாது என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Vanni Arasu states that there is an attempt to play religious politics in Tamil Nadu by highlighting the issue of serving beef to students


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->