கேட்ச் பிடிக்க முயன்ற போது தடுமாறி விழுந்து மைதானத்தில் அசைவின்றி கிடந்த லுங்கி இங்கிடி; ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அதிர்ச்சி காட்சி..! - Seithipunal
Seithipunal


19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 34 வது லீக் ஆட்டம் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு பஞ்சாப் அணிகளுக்கு இடையே  டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்க்சில் டெல்லி அணியின் வீரர் லுங்கி இங்கிடி கேட்ச் பிடிக்க முயன்ற போது கீழே விழுந்து காயம் அடைந்துள்ளார்.

உடனடியாக மைதானத்திற்கு ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்டு, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற காட்சிகள் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 02 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 264 என்ற அதிரடியாக ரன்கள் குவித்துள்ளது.  டெல்லி அணியின் கே.எல்.ராகுல் 67 பந்துகளில் 09 சிக்சர் 16 பவுண்டரியுடன் 152 ரன்கள் குவித்துள்ளார். 

அடுத்ததாக நிதிஷ் ராணா 44 பந்துகளில் 04 சிக்சர் 11 பவுண்டரியுடன் 91 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணியின் வீரர்கள் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில் 03-வது ஓவரின் 03-வது பந்தை அக்சர் படேல், பிரியன்ஷ் ஆர்யாவுக்கு வீசியபோது அவர் அடித்த பந்தை லுங்கி இங்கிடி பிடிக்க முயன்றார். அப்போது அவர் பின்புறமாக டைவ் அடித்தபோது அவரது தலையின் பின் பகுதி தரையில் பலமாக மோதி மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். 

இதையடுத்து எந்த அசைவும் இல்லாமல் மைதானத்தில் கிடந்த அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து அசைவில்லாமல் அவர் இருந்த நிலையில், உடனடியாக ஆம்புலன்ஸ் கொண்டுவரப்பட்டு அவரை மருத்துவ பணியாளர்கள் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். 

இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் போட்டி சில நிமிடங்கள் தாமதமானது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lungi Ngidi who stumbled and fell while attempting to take a catch lay motionless on the field


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->