'உன்னை பிடிக்கவில்லை': நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு 04 கள்ளக்காதலிகள்; ஆந்திர பெண் தற்கொலை..! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான  ரெய்ஹானா, இவர் முதுகலை பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவருக்கும் கடப்பா மாவட்டம் பொத்துட்டூரைச் சேர்ந்தவரும் பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருபவருமான ஷாஜகான் (30) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 15ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இவர்களது திருமணம் வரும் ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், ஆரம்பத்தில் இருவரும் செல்போனில் நீண்ட நேரம் பேசி வந்துள்ளனர். நாளடைவில் அதாவது சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு ஷாஜகானின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த ரெய்ஹானா, கடந்த 23-ஆம் தேதி கடப்பா படேல் வீதியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் இறப்பதற்கு முன்னதாக 12 பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் ஷாஜகான் தன்னிடம், 'எனக்கு உன் மீது துளிகூட ஈடுபாடு இல்லை. உன்னை எனக்கு பிடிக்கவில்லை' என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், தனக்கு ஏற்கனவே நான்கு பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், தனக்கு மதுப்பழக்கம் இருப்பதாகவும் கூறி ரெய்ஹானாவை திருமணத்தை நிறுத்துமாறு ஷாஜகான் வற்புறுத்தியதாக அந்த கடிதத்தில்  ரெய்ஹானா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரெய்ஹானாவின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளதாவது; தனது தந்தை கட்டாயப்படுத்தியதால் தான் திருமணத்திற்கு சம்மதித்ததாக ஷாஜகான் கூறினார். திருமணத்தை நிறுத்துமாறு எங்கள் மகளுக்கு கடும் மன உளைச்சலை கொடுத்துள்ளார். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான எங்கள் மகள் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இதற்கு காரணமான ஷாஜகான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து ரெய்ஹானாவின் உடல் பிதேரத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து சின்ன சவுக் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலைக்கு தூண்டியதாக சாப்ட்வேர் இன்ஜினியர் ஷாஜகான் மற்றும் அவரது பெற்றோர் வீரையா, வாஹிதா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர்  அவர்கள் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Graduate Woman Commits Suicide Heartbroken After Discovering Her Fiance an Engineer Had Four Mistresses


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->