தமன்னாவை 'மில்கி பாடி' என வர்ணித்த 71 வயதான மூத்த நடிகர்; 'தமன்னா காலில் விழுகிறேன்' என்று மீண்டும் சர்ச்சை..! - Seithipunal
Seithipunal


நடிகை தமன்னா நடிப்பில் கடைசியாக வெளிவந்த  படம் 'ஓ ரோமியோ'. தற்போது இந்தி சினிமாவில் அதிகம் கவனம் செலுத்துகிறார். தமிழில் கடைசியாக 2024-ஆம் ஆண்டு 'அரண்மனை 4' படத்தில் நடித்தார். அதன்பிறகு அவர் தமிழில் வேற படங்களில் நடிக்கவில்லை.

தமன்னா 'ஜெயிலர்' படத்தில் 'காவலையா' பாடலில் தனது நடனத்தால் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். அடுத்து, இந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'ஸ்ட்ரீ 2' படத்தில் 'ஆஜ் கி ராத்' பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இந்தப் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று, சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்தப் பாடல் வெளியானபோது, பிரபல பாலிவுட் நடிகர் அன்னு கபூர், தமன்னா 'பால் போன்ற மேனி கொண்டவர்' என்று வர்ணித்து இருந்த நிலையில், அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். அதாவது தமன்னாவை அன்னு கபூர் ஆபாசமாக பேசியிருக்கிறார் என விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இது குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் இது குறித்து அன்னு கபூர் விளக்கம் கொடுத்தார். அதில், அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் பாடல்களை தேர்வு செய்தோம். அப்போது, 'ஆஜ் கி ராத்' பாடலில் தமன்னாவின் கடின உழைப்பையும் நடனத்தையும் பார்த்து வியந்தேன். அதைப் பாராட்டும் விதமாகவே அக்கருத்தைச் சொன்னேன்.

ஒருவரின் அழகை பாராட்டினேன். அதில் எந்த வித தவறான நோக்கமும் இல்லை. தமன்னாவுக்கு இதில் வருத்தம் இருந்தால், அவரிடம் மன்னிப்பு கேட்கத் தயங்க மாட்டேன். 71 வயதான நான் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவும் தயார். நான் இதே கருத்தை ஆங்கிலத்தில் 'மில்கி பாடி' என்று சொல்லியிருந்தால் யாரும் இவ்வளவு பெரிய பிரச்சினையாக்கி இருக்க மாட்டார்கள். நான் இந்தியில் சொன்னதால் அது தவறாகச் சித்தரிக்கப்படுகிறது' என்று விளக்கமளித்துள்ளார்.

இந்த விளக்கம் கொடுத்த பிறகும் மீண்டும் அவர் சர்ச்சையில் சிக்கி கொண்டுள்ளார். பெண்ணின் உடல் நிறம் மற்றும் பாகங்களை பொதுவெளியில் அநாகரிகமாக வர்ணித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annu Kapoor lands in controversy once again after saying I will fall at Tamannaahs feet


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->