15 பந்துகளில் 50; 15 வயதில் 1000 ரன்கள்; டி20 வரலாற்றில் புதிய சரித்திரம் படைத்த வைபவ் சூர்யவன்ஷி..!
Vaibhav Sooryavanshi creates history in T20 cricket by scoring 50 runs off just 15 balls and reaching the milestone of 1000 runs at the age of 15
19-வது ஐபிஎல் தொடரில் 35 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானம் நடைபெற்று வருகிறது. தற்போது நடந்து வரும் போட்டியில் முதல் இன்னிங்க்சில் ஆடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மற்றும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 36 பந்துகளில் 12 சிக்சர், 05 பவுண்டரியுடன் 103 ரன், எடுத்ததன் மூலம் 1000 ரன்கள் கடந்து சாதனை படைத்துள்ளார்.
போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 3-வது பந்திலிருந்து தொடர்ந்து 04 சிக்சர்கள் விளாசி தொடக்கத்திலேயே அதிர காட்டினார். இளம் வீரர் சூர்யவன்ஷி.
இவர் 06 பந்துகளில் 30 ரன்களை எடுத்து மிரட்டி, சிக்ஸ், ஃபோர் மட்டுமே விளாசினார். குறிப்பாக 15 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். அத்துடன், டி20 கிரிக்கெட் வரலாற்றில் 15 ரன்களில் அரைசதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

தொடர்ந்து அதே வேகத்தில் பயணித்த சூர்யவன்ஷி, 19 பந்துகளில் 62 ரன்களைச் சேர்த்தார். இதனிடையே ஜெய்ஸ்வால் 10 ரன்களில் கிளம்பினார். 12 சிக்சர்ஸ், 05 பவுண்டரிகள் அடித்து 36 பந்துகளில் சதம் விளாசி,103 ரன்களில் எல்பிடபள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
ராஜஸ்தான் அணி தரப்பில், துருவ் ஜூரல் 51 ரன்களிலும், ரியான் பராக் 07 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். டோனோவன் ஃபெரைரா 33 ரன்களில் ஆட்டமிழக்க, 19 ஓவர்கள் முடிவில் 05 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்துள்ளது.
English Summary
Vaibhav Sooryavanshi creates history in T20 cricket by scoring 50 runs off just 15 balls and reaching the milestone of 1000 runs at the age of 15