தவெக குறித்த கேள்விக்கு Signature சைகையை ஒன்ஸ்மோர் செய்து காட்டிய முதல்வர் ஸ்டாலின்..!
Chief Minister Stalin Recreates His Signature Gesture in Kodaikanal
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23-ஆம் தேதி வியாழக்கிழமை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இதனையடுத்து, கொடைக்கானல் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு தனது குடும்பத்துடன் ஓய்வெடுக்க சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அங்கு முதலமைச்சர் ஸ்டாலினை கண்டதும் சுற்றுலாப் பயணிகள் அவருடன் உரையாடி செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அப்போது, தவெகவை குறிப்பிட்டு, முதலமைச்சரை அவரது Signature சைகையை ஒன்ஸ்மோர் செய்ய வைத்து மகிழ்ந்துள்ளமை வைரலாகியுள்ளது.
இதற்கு முன்னதாக, காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீடு முடிந்த பிறகு முதலமைச்சரின் இந்த சைகை சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அவரது சைகை ஐகானிக்காக மாறியுள்ளது.
04 நாட்கள் ஓய்வுக்குப் பிறகு முதலமைச்சர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ள நிலையில், கொடைக்கானலில் 02 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
English Summary
Chief Minister Stalin Recreates His Signature Gesture in Kodaikanal