WhatsApp-க்கு போட்டியாக XChat அறிமுகம்; செல்போன் எண்கள் இல்லாமல் லாக் இன் செய்ய முடியும்..? - Seithipunal
Seithipunal


WhatsApp செயலிக்கு போட்டியாக XChat என்ற பிரத்யேக மெசேஜிங் செயலியை X நிறுவனம் உருவாக்கியுள்ளது. தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பவும், வீடியோ கால் சேவைக்காகவும் பெரும்பாலான மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

முதற்கட்டமாக iOS சாதனங்களில் அறிமுகமாகியுள்ள இந்த செயலியில், வாட்ஸ்அப் போன்று வீடியோ மற்றும் ஆடியோ கால், பிரைவேட் மற்றும் குரூப் சேட் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

இதில், பயனாளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக End-to-end encryption, PIN protection, Screenshot Blocking உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

நாம் வாட்ஸ்அப் செயலியை செல்போன் எண் கொண்டு Login செய்யும் நிலையில், XChat செயலியை செல்போன் எண்கள் இல்லாமல் X கணக்கு மூலமே லாக் இன் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பயனர்கள் விளம்பரம் அற்ற அனுபவத்தை பெற முடியும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

XChat Launched to Compete with WhatsApp


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->