இந்தியாவில் முதல் முயற்சி: 16 வயதுக்கு கீழே சோஷியல் மீடியா தடை ...! கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தின் 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் சித்தராமையா இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் முக்கிய அறிவிப்பாக, 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு முழுமையான தடையை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.

மேலும், சிறுவர்கள் மொபைல் போன் மற்றும் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகும் நிலையை கட்டுப்படுத்தவும், அவர்களின் மனநலத்தை பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை அவசியம் என சித்தராமையா விளக்கினார்.

இதற்கான யோசனை குறித்து முன்னதாக பெங்களூருவில் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்தத் தடையை நடைமுறைப்படுத்தும் விதம் குறித்து நிபுணர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க “புத்தகத்தை ஏந்து, மொபைலை கைவிடு” என்ற பெயரில் சிறப்பு பிரசாரம் ஒன்றையும் கர்நாடக அரசு தொடங்கியுள்ளது.

மேலும், சிறார்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள் ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், இந்தியாவில் முதன்முறையாக இந்த வகையான கடுமையான நடவடிக்கையை கர்நாடக அரசு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

First attempt India Social media ban under 16 years age Karnataka government takes drastic action


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->