ரூ.5,000 வரை அபராதம்... சென்னையில் செல்லப் பிராணிகள் வைத்திருப்போர் கவனத்திற்கு! வெளியான முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


சென்னையில் செல்லப் பிராணிகள் வைத்திருப்போருக்காக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெறிநோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் சென்னை மாநகராட்சி சார்பில் நாய்கள் மற்றும் பூனைகளுக்கு ரேபீஸ் தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது.

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாம், திருவிக நகர், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட ஆறு மாநகராட்சி செல்லப் பிராணி மருத்துவமனைகளில் இலவசமாக நடத்தப்படுகிறது. இதேபோன்று நவம்பர் 16 மற்றும் 23 ஆகிய தேதிகளிலும் தொடர்ச்சியாக மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளன.

இந்த முகாமின் நோக்கம், வெறிநாய்க்கடி சம்பவங்களையும் அதனால் ஏற்படும் ஆபத்துகளையும் தடுக்க மக்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பது.

மேலும், செல்லப் பிராணிகளை வைத்திருப்போர் கட்டாயமாக உரிமம் பெற வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. இதற்காக ‘சென்னை கார்ப்பரேஷன் செல்லப் பிராணி உரிமம்’ செயலியில் உரிமையாளர்கள் தங்கள் பெயர், முகவரி, பிராணியின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை பதிவுசெய்து ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.

அதனைத் தொடர்ந்து, கால்நடை மருத்துவப் பிரிவு ஆய்வு செய்து, ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதை உறுதிசெய்த பின் உரிமம் வழங்கப்படும். அப்போது பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்படும்.

உரிமம் பெறாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வரும் நவம்பர் 24 முதல் உரிமம் பெறாத செல்லப் பிராணி உரிமையாளர்களுக்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rabies vaccination pets Chennai


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->