#Breaking: தென்மாவட்டங்களுக்கு டார்கெட்... உருவாகிய புரெவி..! - Seithipunal
Seithipunal


இன்று காலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின் படி, "தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கரையை கடக்கும்." என்று தெரிவித்து இருந்தது.

இதேபோல், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புரெவி புயலாக வெளுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக 2,3 மற்றும் 4ம் தேதிகளில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றவுள்ளது. புரெவி என்று பெயரிடப்பட்டுள்ள புயல் நாளை இலங்கை திரிகோணமலை பகுதியில் கரையை கடக்கும் எனவும், டிசம்பர் 3 ஆம் தேதி குமரிக்கடல் பகுதியில் மையம் கொள்ளும் புயல், வரும் டிசம்பர் 4 ஆம் தேதி கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Purevi Cyclone 1 Dec 2020 Latest Announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->