பள்ளி மாணவியின் குடிநீர் பாட்டிலில் சிறுநீர்! புதுக்கோட்டையில் தொடரும் கொடூரம்.!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் 200 நாட்களுக்கு மேல் கடந்த நிலையிலும் யார் மனித கழிவுகளை கலந்தார்கள் என்பதை கண்டறிய முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனர்.

இந்தசம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதே புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியத்தில் உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் தனது குடிநீர் பாட்டிலை திறந்து தண்ணீர் குடித்து உள்ளார்.

அவர் தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் குமட்டல் ஏற்பட்டு வாந்தி எடுத்ததால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மாணவி குடித்த குடிநீரை சோதனை செய்தபோது அதில் சிறுநீர் கலக்கப்பட்டு இருந்தது தெரிய வநதது. இதனை அடுத்து சக மாணவர்களிடம் விசாரணை செய்த போது அதே வகுப்பில் படிக்கும் இரு மாணவர்கள் இந்த செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் இரு மாணவர்களின் பெற்றோர்களை அழைத்த தலைமையாசிரியர் மாற்றுச் சான்றிதழை வழங்கி வேறு பள்ளிக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் புதுக்கோட்டையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pupils mixed in schoolgirl drinking bottle in pudukottai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->