புதுக்கோட்டை: வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவன்! பலியான சிசு! தீவிர விசாரணையில் அதிகாரிகள்!
Pudukottai Aranthangi Infant Birth Hospital
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்தது பெரும் சோகம் ஏற்படுத்தியுள்ளது.
பெரியசெங்கீரை கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகரின் மனைவி அபிராமி, இவர் அறந்தாங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அபிராமி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நிலையில், திடீரென வலியால் துடித்ததாக கூறப்படுகிறது.
அப்போது, மருத்துவமனைக்கு செல்லாமல், அவரது கணவர் ராஜசேகர் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார்.
இந்த நேரத்தில் சரியான மருத்துவ உதவியின்றி நடந்த பிரசவத்தின் காரணமாக, குழந்தை பிறந்தவுடனே உயிரிழந்தது.
இந்த சம்பவம் மருத்துவ துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Pudukottai Aranthangi Infant Birth Hospital