தமிழ்நாட்டில் 20 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்; டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு கூடுதல் பொறுப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் ஆணைக்கிணங்க டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்பட 20 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார். அத்துடன், சென்னை ஆயுதப்படை டிஜிபி பொறுப்பையும் அவர் கூடுதலாக கவனித்துக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, ஆவடி காவல் ஆணையரக கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி, சென்னை டிஜிபி அலுவலகத்துக்கும், தாம்பரம் காவல் ஆணையரக சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக ஜெயந்தி ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், டிஜிபி அலுவலகத்தின் நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி.யாக ரயில்வே ஐஜி பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளதோடு, காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெயராமன், சென்னை ஊர்க்காவல் படை ஏடிஜிபி ஆக மாற்றபட்டுள்ளார்.

அடுத்ததாக, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை எஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில், ராணிப்பேட்டை எஸ்.பி.யாக சிபின், செங்கல்பட்டு எஸ்.பி.யாக ஐமன் ஜமாலையும்  நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

20 police officers transferred in Tamil Nadu including Davidson Devasirvatham


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->