'ஹேப்பி மூடுல இருக்கேன்.. அவர் மன உளைச்சலில் இருப்பார்'; விஜய்யை கிண்டலடிக்க கருணாஸ்..!
Karunas teases Vijay saying he must be depressed
தவெக தலைவரான நடிகர் விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். பிரபல நடிகை உடனான தொடர்பே இந்த விவாகரத்து முடிவுக்கு காரணம் என சங்கீதா பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
நேற்றில் இருந்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இணையம் முழுவதும் இந்த விவாகரத்து குறித்த செய்திகள் பேசும் பொருளாகியுள்ளது.
இந்நிலையில், முக்குலத்தோர் புதுப்படைத் தலைவர் கருணாஸ் அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி குறித்து திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது "வரும் சட்டமன்ற தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்'' என்று உறுதிப்படுத்தியுள்ளார். அதன் போது விஜய் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, ''ஹேப்பி மூடுல இருக்கேன்.. இப்ப எதுக்கு விஜய் பற்றி..? அவரே மன உளைச்சல்ல இருப்பார்" என்று கிண்டலாக பதிலளித்துள்ளார்.
English Summary
Karunas teases Vijay saying he must be depressed