அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் தொடக்கப் பள்ளி மீது வான்வழித் தாக்குதல்; 51 சிறுமிகள் உயிரிழப்பு; 45 பேர் படுகாயம்; அதிர்ச்சி வீடியோ..!
51 girls killed in US and Israeli airstrike on Iranian elementary school
இன்று காலை முதல் அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது.
தெற்கு ஈரானில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 51 சிறுமிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெற்கு ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள மினாப் நகரில் உள்ள ஷஜாரே தயேபே பள்ளி இன்று காலை தாக்குதலுக்கு உள்ளானது. இந்த தாக்குதல் நடந்த நேரத்தில் பள்ளியில் சுமார் 170 பெண் மாணவிகள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் கொல்லப்பட்ட சிறுமிகள் 07 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், இதுவரை குறைந்தது 45 பேர் காயமடைந்துள்ளதாக ஈரானின் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து, இஸ்லாமிய புரட்சிகர காவல்படை சமூக வலைதளத்தில் பள்ளியின் இடிபாடுகளை சிக்கியுள்ளவர்களை உள்ளூர்வாசிகள் தோண்டி எடுக்கும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில், சுற்றியுள்ள கட்டிடங்களில் இருந்து புகை எழுவதையும், சிதைந்த கார் தெருவில் கிடப்பது, மக்கள் அலறி அழுது புலம்புவதையும் காட்டுகிறது.
இந்த வீடியோவில் தெஹ்ரான் மட்டுமின்றி புனித நகரமான கோம், கராஜ், இஸ்ஃபஹான் மற்றும் கெர்மன்ஷா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆனால், ஈரானிய ஊடகங்கள் இன்னும் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கையை வழங்கவில்லை, அதேநேரத்தில், ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனி பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 'ஈரானிய ஆட்சியின் அச்சுறுத்தல்களை நீக்குவதன் மூலம் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதே எங்கள் நோக்கம்.' என்று கூறியுள்ளார்.
அத்துடன், ஈரான் அணு ஆயுதத்தைப் பெறாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம் என்றும் மிகவும் எளிமையான செய்தி என்றும் அவர் கூறியுள்ளார்.
English Summary
51 girls killed in US and Israeli airstrike on Iranian elementary school