தவறை சுட்டிக்காட்டினால் பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்துவது தான் ஸ்டாலின் ஆட்சியின் இலக்கணமா? அதிமுக கண்டனம்! - Seithipunal
Seithipunal


அதிமுக விடுத்துள்ள கண்டன செய்தியில், " சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பள்ளி சிறுவர்கள் இடையே போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து இருக்கும் செய்தி வெளியான நிலையில், தனியார் தொலைக்காட்சி நிருபரை அடிக்கப் பாய்ந்த திமுக அரசின் காவல்துறை SSI..!!

தவறை சுட்டிக்காட்டினால், அதை விசாரிக்கவோ, திருத்தவோ வக்கில்லாமல், இப்படி செய்தி வெளியிடும் பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்துவது தான் ஸ்டாலின் ஆட்சியின் இலக்கணமா?

சிறு குழந்தைகள் பாதிக்கப்படும் விஷயத்தில் கூட சரியான முறையில் செயல்படாமல், செய்தியை இழுத்து மூட முயற்சிப்பதன் மூலம், தமிழக மக்களுக்கு இந்த விடியா திமுக அரசு சொல்ல வரும் செய்தி என்ன?

நம் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான, போதையில்லாத சூழலை உருவாக்க முடியாது என தன் செயல்கள் மூலம் கூறுகிறதா ஸ்டாலின் அரசு?

பத்திரிகையாளர் மீது அடிக்கப் பாய்ந்த காவல்துறை SSI மீது நடவடிக்கை எடுப்பதுடன், சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெறும் சட்டவிரோத செயல்களை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Condemn to DMK Stalin govt tn police


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->