மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..மக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர்! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம்,மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று,கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 298 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், அறிவுறுத்தினார்.

 மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் திரவ எரிவாயு மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டி வழங்கும் திட்டத்தின் கீழ் 01 பயனாளிக்கு ரூ.6,700/- மதிப்பீட்டிலான திரவ எரிவாயு மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித் வழங்கினார். 
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வி கீர்த்தனா மணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திருமதி ஜெயமணி உட்பட அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Public grievance redressal day meeting the district collector who listened to the peoples grievances


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->