திருட வரவில்லை எனக் கூறியும் நேபாள பெண்ணை கட்டி வைத்து தாக்கிய கொடூரம்.. 4 பேர் கைது! - Seithipunal
Seithipunal


திருட வரவில்லை எனக் கூறிய நேபாள பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம்  அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது .இது தொடர்பாக  4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேபாளத்தைச் சேர்ந்த சுஷ்மிதா சரு மஹர் இந்தியா வந்து பரடரி பகுதியில் வாடகைக்கு வசித்து வந்தார். இவர் இந்தியாவில் வேலை தேடி வந்துள்ளார்.அப்போது சம்பவத்தன்று நேற்று இரவு 1 மணியளவில் வீட்டின் மொட்டை மாடியில் செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டு சிலர் திருட வந்தவர் என சந்தேகித்து தாக்க முயன்றனர்.

அதிர்ச்சியடைந்த சுஷ்மிதா கீழே குதித்து காயமடைந்தாலும், அந்தக் குழுவினர் மின்கம்பத்தில் கட்டி வைத்து, கட்டைகளால் அத்துமீறி தாக்கினர். தன்னை வாடகைதாரியாக விளக்கியும் பயனில்லை.சமாதானம் ஆகாத அந்த கும்பல் அவரை தொடர்ந்து தாக்கியது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுஷ்மிதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது புகாரின் பேரில் கவுரவ் சக்சேனா, சிவம் சக்சேனா, அமன் சக்சேனா, அருண் சைனி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் தலைமறைவாக உள்ளனர்.இந்த கொடூர தாக்குதலின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Despite saying that no one has come to steal the brutality of tying up and attacking a Nepalese woman 4 people arrested


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->