மக்கள் ஒப்புதலுடன் மட்டுமே திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்...! - பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக விவகாரத்தில் தொல்.திருமாவளவன்...! - Seithipunal
Seithipunal


சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கும் திட்டம் தொடர்பாக அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். மக்கள் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைப்பதற்காக சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவையான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் அலுவலக வளாகம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் 110-வது விதியின் கீழ் அறிவித்திருந்தார்.இதற்காக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான 21.37 ஏக்கர் நிலம், சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 0.93 ஏக்கர் நிலம் மற்றும் வருவாய்த்துறை ஆவணங்களில் இடம்பெறாத சுமார் 1.20 ஏக்கர் நிலம் என மொத்தம் 26.36 ஏக்கர் பரப்பளவு பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்படுவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்த தொல்.திருமாவளவன் கூறியதாவது,"மக்களின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த முடியாது.

பரந்தூர் விமான நிலையத் திட்டத்திலும் இதே நிலைப்பாடுதான் உள்ளது.அதேபோல், பட்டினப்பாக்கத்தில் சுமார் 27 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்துக்கும் அப்பகுதி மக்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். மக்களின் இசைவு இருந்தால் மட்டுமே அந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவது தொடர்பாகவும் திருமாவளவன் தனது கருத்தைத் தெரிவித்தார்.“இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவது அவர்களது அரசியல் சுதந்திரம் மற்றும் உரிமையாகும். அவர்கள் தனியாக களம் காண்கிறார்களே தவிர, அது த.வெ.க.வுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ, தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ பொருள்படுத்த முடியாது.

ஒவ்வொரு கட்சிக்கும் தனது அரசியல் முடிவுகளை எடுக்கும் உரிமை உள்ளது. எனவே, இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதால், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Projects should be implemented only consent people thirumavalavan issue new Chief Secretariat Pattinapakkam


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->