அதிகரிக்கும் நீர்வரத்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு...! காவிரி டெல்டா விவசாயிகளின் தற்போதைய நிலவரம் என்ன...?
Increasing water inflow rising water level Mettur dam What current situation Cauvery Delta farmers
கடந்த சில நாட்களாக கர்நாடகத்தில் உள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 9 ஆயிரத்து 786 கனஅடி தண்ணீர் தமிழகத்தை நோக்கி திறக்கப்பட்டது. இதன் எதிரொலியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.

நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிப்பாய்ந்து கொட்டியது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த நிலையிலும், சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.இதற்கிடையே, மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 7 ஆயிரத்து 598 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 8 ஆயிரத்து 618 கனஅடியாக உயர்ந்துள்ளது.
எனினும், அணைக்கு வந்து சேரும் நீரின் அளவைவிட, அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாகவே உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 88.21 அடியாக குறைந்துள்ளது. டெல்டா மாவட்டங்களின் பாசன தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளபோதிலும், தொடர்ந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் நீர்மட்டம் மேலும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
English Summary
Increasing water inflow rising water level Mettur dam What current situation Cauvery Delta farmers