சுகாதாரமில்லாத குடிநீரால் 08 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு; நெல்லையில் தனியார் கல்லூரி மூடல்..!
Private college in Nellai closed due to unsanitary drinking water supply
நெல்லை அருகே திடியூர் பகுதியில் செயல்படும் பிரபல தனியார் கல்லூரி ஒன்றில் 2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்விக் கற்று வருகின்றனர்.
குறிப்பாக வெளியூர் சார்ந்த ஏராளமான மாணவர்கள் இங்கு படித்து வருவதால், அவர்களுக்கு அந்த கல்லுரி வளாகத்தில் தாங்கும் விடுதியும் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி அருகே நம்பியாறு ஆறு ஓடுகிறது. இதில் இருந்து உபரி நீர் வெளியே சென்று கொண்டிருந்த நிலையில் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் உபரி நீரை கல்லூரி மாணவர்கள் குடிப்பதற்காகவும் உணவு உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காகவும் பயன்படுத்தி வரப்பட்டுள்ளது.
இந்த சுத்தமான நீரை பயன்படுத்தியதில், கல்லூரி விடுதியில் தங்கி இருந்து படிக்கும் 08 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார துறைக்கு புகார்கள் சென்றுள்ளனர். அதன் அடிப்படையில் இன்று சுகாதார துறை அதிகாரிகள் அந்த கல்லூரி உள்ளே மற்றும் வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வுகளை நடத்தினர்.

அப்போது, அந்த கல்லூரியில் ஆய்வு நடந்த சமயத்தில் உணவு தயாரிப்பது, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு மாணவர்கள் பயன்பாடுகளுக்காக சுகாதாரமற்ற நீர் பயன்படுத்தப்பட்டதாக தகவல் கூறப்பட்டது. இதனையடுத்து, உடனடியாக மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் கல்லூரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
அதில், சுகாதாரம் சம்பந்தபட்ட அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும் வரை கல்லூரியை திறக்க வேண்டாம் என்றும், அதுவரை கல்லூரியை மூடுவதற்கும் உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து, கல்லூரி நிர்வாகம் சார்பிலும் மாணவர்களுக்கு தற்போது விடுமுறை அளிக்கப்பட்டு வீட்டிற்கு சென்று வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Private college in Nellai closed due to unsanitary drinking water supply