காவலர்களுக்கு தண்ணி காட்டிய கைதி...ஓட ஓட விரட்டிப் பிடித்த நெல்லை காவலர்கள்...! அதிரடி காட்டிய கமிஷனர்...! - 2 காவல் ஏட்டுகள் ‘சஸ்பெண்ட்’!
prisoner who showed water guards chased him away and caught him commissioner who showed action 2 police records suspended
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா பரப்பாடி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய அலெக்ஸ் சாம்ராஜ், அப்பகுதியில் ஏற்பட்ட தகராறு சம்பவம் தொடர்பான வழக்கில் விஜயநாராயணம் காவலர்களால் கைது செய்யப்பட்டார். அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க காவல்துறை ஏட்டுகள் முத்துராமலிங்கம் மற்றும் லட்சுமணன் ஆகியோர் நேற்று முன்தினம் அழைத்து வந்தனர்.
சிறைக்கு கொண்டு வரும் வழியில், அலெக்ஸ் சாம்ராஜ் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவித்ததால், காவலர்கள் அவரை உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மதிய நேரத்தில் காவலர்களின் கண்காணிப்பை தவிர்த்து அலெக்ஸ் சாம்ராஜ் அங்கிருந்து தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. கைதி தப்பியோடியது தெரியவந்ததும் காவலர்கள் அதிர்ச்சியடைந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கைதியை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.தப்பிச்சென்ற அலெக்ஸ் சாம்ராஜ், மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று பின்னர் மீண்டும் பஸ்சில் நெல்லை திரும்பி வந்ததாக விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து உஷாரடைந்த காவலர்கள் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் மறைந்து காத்திருந்தனர்.குறிப்பிட்ட பேருந்தில் இருந்து அலெக்ஸ் சாம்ராஜ் இறங்கியவுடன், காவலர்கள் அவரை சுற்றிவளைத்து மீண்டும் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, கைதியை பாதுகாப்பாக அழைத்து செல்லும் பணியில் அலட்சியம் காட்டியதாக கருதப்பட்ட காவல்துறை ஏட்டுகள் முத்துராமலிங்கம் மற்றும் லட்சுமணன் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் பிறப்பித்துள்ளார்.
English Summary
prisoner who showed water guards chased him away and caught him commissioner who showed action 2 police records suspended