#Breaking: பூண்டி ஏரி நீர் திறப்பு.. உச்சகட்ட எச்சரிக்கை விடுத்த பொதுப்பணித்துறை.! - Seithipunal
Seithipunal


பூண்டி ஏரியில் இருந்து இன்று மாலை நீர் திறக்கப்படவுள்ளது. அங்கிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு நீர் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 38 அடி நீர்த்தேக்க திறன் கொண்ட பூண்டி ஏரி, 34 அடியை இன்று மாலை எட்டிவிடும் என்பதால், நீர் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி - மாமல்லபுரம் இடையே கரையை கடந்த நிவர் புயல், வடகிழக்கு திசையில் பயணம் செய்து ஆந்திராவிற்கு சென்றுள்ளது. இதனால் அங்குள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், கொசஸ்தலை ஆற்றுக்கு நீர் வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக இருக்கிறது. 

இதனால் இன்று மாலைக்குள் பூண்டி ஏரி 34 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இன்று மாலை 5 மணியளவில் பூண்டி ஏரி திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படும் என்றும், வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படும் என்றும் பொதுப்பணித்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Poondi Reservoir Lake Open Today 27 November 2020 Kosasthalaiyar River Peoples Flood Alert


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->