வங்கி கணக்கில் பொங்கல் பரிசுத் தொகை.?! இதை உடனே செய்யுங்கள்.!
Pongal parisu fund In Every Family account Number
ரேஷன் கடைகளில் தற்போது ஸ்மார்ட் கார்டுகள் மூலமாக அரிசி பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பல பொருட்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. குடும்பம் இல்லாதவர்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியாது. இத்தகைய நிலையில், இந்த ஸ்மார்ட் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது
ஏற்கனவே, வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. பலரும் இணைத்தனர் ஆனால், அதிகப்படியானோர் வங்கி கணக்கை ஆதாருடன் இணைக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. சிலர் வங்கி கணக்குடன் ஆதார் கார்டை இணைக்காமல் இருக்கின்றனர். அத்துடன் ரேஷன் கார்டையும் இணைக்கவில்லை.
எனவே ரேஷன் கடை ஊழியர்களுக்கு உணவு வழங்கல் துறை மூலமாக ஒரு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருக்கும் குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் ஒவ்வொரு கடைக்கும் அனுப்பப்பட்டு அவர்களை இணைக்க ஒரு படிவம் வழங்கப்பட்டு அதை பூர்த்தி செய்து கொடுக்கும்படி கூறப்பட்டுள்ளது.

இம்மாத இறுதிக்குள் வங்கி கணக்குடன் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என சிவில் சப்ளை துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் ரேஷன் கடை ஊழியர்களும் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றன. அரசு தரப்பில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதை ரொக்கமாக வழங்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வரும் நிலையில் வங்கி கணக்கில் பொங்கல் பரிசு தொகையை வழங்கினால் மக்களுக்கு எளிமையாக சென்று சேரும் என்று எண்ணப்படுவதால் இதை செயல்படுத்த அரசு ஆலோசித்து வருகின்றது.
இது குறித்து அதிகாரிகள் கூறிய போது, "அரசின் திட்டங்கள் மக்களுக்கு வங்கி கணக்குகளில் மூலமாக சென்றடைய வேண்டும். எனவே, தான் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருப்பவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், தீவிரமாக பணி நடந்து வருகிறது. இந்த வருடம் வங்கி கணக்கில் பொங்கல் பணத்தை செலுத்துவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கின்றன." என்று தெரிவித்துள்ளனர்.
English Summary
Pongal parisu fund In Every Family account Number